search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை கழிவு தொற்றுநோய்"

    வத்தலக்குண்டு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பகுதியில் பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பஸ்நிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் நகரின் பல பகுதிகளிலும் கழிவுநீர் தெருவில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    காமராஜபுரம் பகுதியில் குடிநீர் குழாய் அருகே சாக்கடை கழிவுகள் செல்லமுடியாமல் அடைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போதே ஒருசிலருக்கு அரிப்பு போன்ற தோல்வியாதிகள் ஏற்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மேலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்களே சாக்கடையை தூர்வாரி வருகின்றனர்.

    ×